fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2024 13:38

உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மரக்கறி வகைகளின் விலை துரிதமாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றுக்கான கேள்வி குறைவடைந்தது. இந்நிலையில் தற்போது மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

சகல பொருளாதார மத்திய நிலையங்களிலும் மரக்கறி வகைகளின் விலை இன்றைய தினம் குறைவடைந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. மழை காரணமாக மரக்கறிகளின் விலை துரிதமாக அதிகரித்த நிலையில் நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை குறைத்துக்கொண்டனர். அதன் காரணமாக மரக்கறி விற்பனையில் ஈடுபடுவோர் பெறும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டதோடு, தன்னிச்சையாக விலை குறைப்பை மேற்கொளள வேண்டிய சூழல் உருவானாது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கெரட் இன்றைய தினம் 900 ரூபா வரை குறைவடைந்துள்ளது. கோவா, பீட், லீக்ஸ், உள்ளிட்ட பெரும்பலான மரக்கறிகள் 320 ரூபாவுக்கும், 400 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுவரெலிய பொருளாதார மத்திய நிலையத்தில் தலைவர் அருன ஷாந்த குறிப்பிட்;டார்.

இந்நிலையில் பண்டாரவளை மொத்த மரக்கறி சந்தையில் கெரட் ஒரு கிலோ கிராம் 600 ரூபாவுக்கும் 700 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போஞ்சி, ராபு, தக்காளி என்பவற்றின் விலையும் பெருமளவு குறைடைந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். கெப்பத்திபொல தம்புத்தேகம, ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களிலும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுககையில் மரக்கறி விலை கனிசமான அளவு குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் மேல் மாகாணத்திலுள்ள சகல சதொச கிளைகளின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டை விற்பனை முன்னெடுக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2024 13:38

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44