fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விவசாய அபிவிருத்திக்காக வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2024 16:37

விவசாய அபிவிருத்திக்காக வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம்

விவசாய அபிவிருத்திக்காக வசதிகளை வழங்கும் முதலாவது வேலைத்திட்டம் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வு மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கோழி முட்டைகளை அடைகாக்கும் இலத்திரனியல் கருவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. முட்டை உற்பத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவிகளும் வழங்கப்பட்டன. பிரதமர் செயலகத்தினால் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் திட்டத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனா அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பை பிரயோசனப்படுத்தும் வகையில் சகல மாவட்டங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென பிரதமர் குறிப்பிட்டார். அஸ்வெசும திட்டத்திற்கான முதற்கட்ட பயனாளிகளின் தெரிவு நிறைவடைந்துள்ளது. மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படுகின்றன. கடந்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதை போன்று அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் குறித்த தீர்மானத்தை எட்டியதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2024 16:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க