fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியை சந்தித்த இளவரசி ஏன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2024 18:44

ஜனாதிபதியை சந்தித்த இளவரசி ஏன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பிரித்தானிய அரச குடும்ப இளவரசியான ஏன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

பிரித்தானிய அரச குடும்ப இளவரசியான ஏன் மற்றும் அவரது கணவர் வைஸ் எட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் அவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது அவர்களுக்கு வெளிவிவகாரஅமைச்சர் அலி சப்ரியினால் வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து இளவரசி ஏன் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் ஜனாதிபதி மற்றும் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்தர்ப்பத்தை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி மாளிகையிலுள்ள விசேட விருந்தினர்களுக்கான குறிப்பு புத்தகத்தில் இளவரசி ஏன் நினைவு குறிப்பொன்றை எழுதினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதேவேளை இளவரசி ஏன் இன்று முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே மற்றும் பதில் தியவடன நிலமே மஹிந்த தேல ஆகியோர் அவரை வரவேற்றனர். இளவரசி ஏன், ஸ்ரீ தலதாமாளிகையில் வழிபாட்டிலும் ஈடுபட்டார். அவரைப் பார்ப்பதற்காக உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் தலதாமாளிகைக்கு அருகில் கூடியிருந்தனர்.
இளவரசி ஏன் உள்ளிட்ட குழுவினர் வடமாகாணத்திற்கும் விஜயம் செய்தனர். யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவரை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு இளவரி ஏன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் விஜயம் செய்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2024 18:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க