fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 24 மணி நேரத்தில் யுக்திய சுற்றிவளைப்பில் 999 பேர் கைது..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2024 15:05

கடந்த 24 மணி நேரத்தில் யுக்திய சுற்றிவளைப்பில் 999 பேர் கைது..

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட யுக்திய சுற்றி வளைப்பில் போதைப்பொருட்களுடன் 999 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து இன்று அதிகாலை 3 மணி வரை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

யுக்திய சுற்றி வளைப்பில் கைதுசெய்யப்பட்ட 999 சந்தேக நபர்களில் 31 பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையான 26 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பட்டியல்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் 54 பேரும் இதன்போது கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் 453 கிராம் ஹெரோயின் 306 கிராம் ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டன. கொக்கெய்ன் 940 கிராம், 57 கிலோ கிராம் கஞ்சா, 31 ஆயிரத்து 168 கஞ்சா செடிகள் ஒரு கிராம் அஸீஸ் 147 கிராம் மாவா, 14 கிராம் தூள், 234 போதை மாத்திரைகள் ஒரு கிராம் ஹேஷ் மதனமோதக உருண்டைகள் 629 என போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

3 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் வெள்ளவத்த பகுதியில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது. போதைப்பொருள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீரகெட்டிய பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள கஞ்சா சேனை சுற்றிவளைக்கப்பட்டதோடு 60 கிலோ கிராம் உலர்ந்த கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். கதிர்காமம் கொச்சிப்பத்தனை பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
யுக்திய சுற்றிவளைப்பின் கீழ் தங்கல்ல பொலிசார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் 24 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளை மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வெயாங்கொட ஆனா மற்றும் பேக்கோவா எனும் புனைப்பெயரைக் கொண்டு இயங்கும் இருவர் வெயாங்கொட பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருள் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களோடு அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை ஒன்லைன் ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்ததாக கூறப்படும் நபர் ஒருவர் 30 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அத்திட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டார். தெஹிவளை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அவரிடமிருந்து இரு கையடக்கத்தொலைபேசிகள், டிஜிட்டல் தராசு மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2024 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க