fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிவப்பு சீனியின் விலையில் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2024 13:07

சிவப்பு சீனியின் விலையில் அதிகரிப்பு

வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக நேற்று (09) சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் மாத்திரமே சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுவதாகவும், நேற்று (09) நடைபெற்ற டெண்டரின் பின்னர் ஒரு கிலோகிராம் சீனி 322 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் சீனி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி பதினெட்டு வீதம் (18%) வற் வரியும் 2.6% சமூக பாதுகாப்பு வரியும் சேர்த்து ஒரு கிலோகிராம் சீனியின் விலை 390 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிவப்பு சீனி 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அந்த சீனிக்கு 50 ரூபாய் மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

இதன்படி, சிவப்பு சீனியின் விலையை விட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை சுமார் 150 ரூபா குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2024 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க