fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிழக்கின் பொங்கல் நிகழ்வில் வரலாறு காணாத நடன ஆற்றுகை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2024 15:37

கிழக்கின் பொங்கல் நிகழ்வில் வரலாறு காணாத நடன ஆற்றுகை

தமிழரின் வரலாற்று பொங்கல் நிகழ்வில் வரலாறு காணாத நடன ஆற்றுகையை நிகழ்த்திய கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்கள்.

கிழக்குமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்காண பொங்கல் விழா நிகழ்வுகள் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் கடந்த 4 நாட்களாக திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் இறுதி நிகழ்வுகள் சிறம்பாக இடம்பெற்று வருகிறது.

இவ் வருட கிழக்குமாகாண பொங்கல் நிகழ்வில் இலங்கையில் வரலாறுகாணாத ஜல்லிக்கட்டு விளையாட்டு இலங்கை இந்திய ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் ஒத்துளைப்புடன் சம்பூர் மண்ணில் நடத்தப்பட்டது யாவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து மாபெரும் படகோட்டப்போட்டி கிண்ணியாவிலே நடைபெற்றது.

இன்றைய தினம் 1000ம் பானைகள் பொங்கப்படும் பொங்கல் போட்டி, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான குழு ரீதியான கோலப்போட்டி மற்றும் சிலம்பம் போட்டி என்பன இடம்பெறுகின்ற வகையில் மேலும் ஒரு வரலாற்று சாதனை நிகழ்வாக 1500 பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது. இந் நடன ஆற்றுகை நிகழ்வு சிறப்பான முறையில் கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டது. இவ் நடன நிகழ்வின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்குபற்றியிருந்தனர். இவ் நடன ஆற்றுகை பார்ப்போரை பிரமிப்பூட்டும் வகையில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2024 15:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க