இலங்கையின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 125 ஆவது ஜனனதினம் இன்றாகும். இதனை முன்;னிட்டு காலிமுகத்திடல் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு அருகில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் 4 ஆவது பிரதமரான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க துப்பாக்கிச் சூட்டொன்றில் கொல்லப்பட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை உருவாக்கிய முன்னோடி எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவாகும். இலங்கைக்கு சர்வஜென வாக்குரிமை கிடைக்கப்பெற்றதை அடுத்து இயங்கிய அரச மந்திரி சபைக்கு தெரிவான அவர் சுகாதாரம் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக செயற்பட்டார். சிங்கள மொழியை அரச மொழியாக்கியமை, ஊழியர் சேமலாப நிதியத்தை ஏற்படுத்தியமை, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டமை உள்ளிட்ட பல பாரிய நடவடிக்கைகளை அவரது காலத்தில் முன்னெடுத்தார்.
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 125 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடலில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் விசேட நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி ச்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்டோர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். சுனேத்ரா பண்டாரநாயக்க உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.