fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமனம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2024 09:42

திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமனம்

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று வெள்ளிக்கிழமை (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 6, 2024 09:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க