fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரான் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 16:08

ஈரான் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ஈரானில் நேற்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காஷேம் சொலைமானியை நினைவுகூர்ந்து இடம்பெற்ற ஆண்டு பூர்த்தி நிகழ்வின் மீது இரு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதோடு அதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடும் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவருமென ஈரான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கஷெம் சொலைமானி கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்து 4 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு அதனை நினைவு கூர்ந்து இடம்பெற்ற பிரதான நிகழ்வின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஈரான் மீது இவ்வாறான பாரிய தாக்குதல் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி காலப்பகுதியிலேயே நடத்தப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 16:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க