fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பான் நிதி அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 15:33

ஜப்பான் நிதி அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜப்பான் நிதி அமைச்சர் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 10 வருடங்களின் பின்னர் ஜப்பான் நிதி அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ரொட்னி எம் பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று நான் ஜப்பான் நிதியமைச்சரை சந்தித்தேன். இன்னும் ஒரு வாரத்தில் ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வார். 10 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் வரும் அவர் 2 நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார். இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஜப்பானின் உதவி எந்தவிதத்தில் தேவைப்படுகிறது, கடன் மறுசீரமைப்பில் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் அதற்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி வழங்கும் என்றும் அவர் எம்மிடம் தெரிவித்தார். இதற்கு மேலதிகமான அடிப்படை வசதி அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜப்பான் முதலீட்டாளர்களை எவ்வாறு நாட்டுக்கு அழைப்பது பற்றிய கலந்துரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான தனியார் துறையினரை தொடர்புபடுத்துவதற்கான விடயங்கள் குறித்தும் இலங்கை விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 15:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க