ஹிக்கடுவைக்கு அண்மித்த மேற்கு கடல் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 325 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 கிலோ கிராம் ஹெரோயினுடன் 6 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் ஆகியன இணைந்து தென்கடல் பகுதியில் நெடுநாள் மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தியவர்களை இவ்வாறு கைதுசெய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் சந்தேக நபர்கள் இன்று காலை காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டனர். போதைப்பொருள் தொகை காலி தெற்கு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டதோடு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அதனை பார்வையிட்டார்.