fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேசிய மட்டத்தில் வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2024 18:23

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேசிய மட்டத்தில் வேலைத்திட்டங்கள்

டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தேசிய மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதியின் வழிகாட்டலில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் ஆலோசனைக்கு அமைய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து டெங்கு அவதானம் உள்ள வலயத்தை கேந்திரமாக கொண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதுதொடர்பான முதல்கட்ட கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால தலைமையில் இடம்பெற்றது.

பொலிசார் உட்பட முப்படையினரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர். அதற்கமைய டெங்கு நுளம்பு ஒழிப்புக் குழு மாவட்ட மட்டத்தில் இன்று முதல் ஸ்த்தாபிக்கப்படவுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதிகளை சோதனை செய்யும் செயற்பாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2024 18:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க