fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரானில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் 103 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2024 10:18

ஈரானில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் ஜெனரல் காஷம் சொலைமானி அமெரிக்காவினால் கொலை செய்யப்பட்டதன் 4 வருட பூர்த்தியை நினைவு கூறும் வகையில் அவரது நினைவுத் தூபிக்கு அருகில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது இடம்பெற்ற இரு குண்டுத்தாக்குதல்களில் குறித்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கர்மன் நகரில் உள்ள ஷைஹேட் அல் சமான் பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற பேரணியை இலக்கு வைத்து மற்றுமொரு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அல்கமேனி குறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படுமென தெரிவித்துள்ளார். 42 வருடங்களின் பின்னர் ஈரானில் இடம்பெற்ற பாரிய பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2024 10:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க