fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

18 வயதுக்கு மேல் என்றால் வரிப்பதிவு கட்டாயம்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2024 14:52

18 வயதுக்கு மேல் என்றால் வரிப்பதிவு கட்டாயம்..

18 வயதுக்கு மேல் உள்ள சகலரும் வரி செலுத்துபவர்களாக பதியப்படவேண்டியது கட்டாயமென ராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

“18 வயதுக்கு மேற்பட்ட சகல குடிமக்களும் வரி செலுத்துபவர்களாக அடையாளப்படுத்தப்படுவதற்கு கட்டாயம் பதியப்படவேண்டும். வரி அறவீட்டு வலையமைப்பை விஸ்த்தரிப்பதற்கு அரசாங்கம் தற்போது எடுத்துள்ள தீர்மானம் அதுவாகும். நீங்கள் இவ்வாறு பதிவு செய்யப்படுவதன் ஊடாக கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல. நீங்கள் பதியப்படவேண்டியது கட்டயாம். உங்களது வருடாந்த வருமானம் 12 இலட்சத்திற்கும் அதிகம் என்றால் அதாவது வரி விலக்கீட்டு வருமானத்தை விட அதிக வருமானம் உங்களுக்கு கிடைக்குமாயின் அவர்கள் அல்லது அந்த நிறுவனம் வரி செலுத்த வேண்டும். எனவே 18 வயதுக்கு மேற்பட்டோர் வரிக் கோப்புக்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை ஒரு சில குழுக்கள் பிழையாக பிரசாரம் செய்கின்றன. பதிவு செய்யப்பட்ட அனைவரும் வரி செலுத்த வேண்டுமென சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். நீங்கள் பதிவுசெய்யப்பட வேண்டியது கட்டாயம். அதேபோல் வருடாந்தம் 12 இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் உங்களுக்கு கிடைக்குமாயின் நீங்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். வரி விதிப்பு வலையமைப்பை விஸ்த்தரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.” என குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2024 14:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க