fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெஹிவளை கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2024 14:06

தெஹிவளை கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டது

போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என கூறப்படும் தெஹிவளையில் அமைந்துள்ள ஹோட்டல் கடலோரப் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் என அடையாளம் காணப்பட்டதையடுத்து அதிகாரிகள் அதனை இடித்துள்ளனர்.

கடற்கரையோர ஹோட்டல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொலிஸாரின் உதவியுடன் கடலோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் அதிகாரிகளால் இன்று ஹோட்டல் இடிக்கப்பட்டது.

விடுதியிலுள்ள அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் மற்றும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2024 14:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க