fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்கத்திற்கு சொந்தமான இரு உர நிறுவனங்களில் 480 மில்லியன் ரூபா இலாபம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2023 07:41

அரசாங்கத்திற்கு சொந்தமான இரு உர நிறுவனங்களில் 480 மில்லியன் ரூபா இலாபம்

அரசாங்கத்திற்கு சொந்தமான இரு உர நிறுவனங்கள் இவ்வருடம் 480 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளன. கொழும்பு கொமர்ஸல் உர நிறுவனம் 360 மில்லியன் ரூபாவையும் , லங்கா பொஹோர நிறுவனம் 120 மில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இரு நிறுவனங்களின் உர விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கான சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் ஈட்டியுள்ள இலாபத்தை அடிப்படையாக வைத்து, ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவு வழங்க அமைச்சர் மஹிந்த அமரவீர அனுமதி வழங்கியுள்ளார். இதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணியாற்றும் சகலருக்கும் இரு மாத சம்பளம் போனஸ் கொடுப்பனவாக வழங்கப்படும்.

இதேவேளை உர நிறுவனங்கள் , உர விற்பனைக்கு மேலதிகமாக கிரிமி நாசினிகளை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு நிறுவன தலைவர்களுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2023 07:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க