fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெப்ரவரி மாதம் மின் கட்டணம் குறைக்கப்படும் அறிகுறி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2023 12:43

பெப்ரவரி மாதம் மின் கட்டணம் குறைக்கப்படும் அறிகுறி

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மின்கட்டணம் குறைக்கப்படுமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெட் வரி மின்கட்டணத்திற்கு தாக்கம் செலுத்தாதென ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் கடந்த 20ம் திகதி கலந்துரையாடப்பட்டது. நீர்மின் உற்பத்தி , நிலக்கரி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி தொடர்பான தரவுகள் மின்சார சபையிடம் கோரப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 15ம் திகதி சகல தரவுகளையும் வழங்குவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. மின் கட்டணம் திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைக்கும் யோசனைகளை முன்னிலைப்படுத்தி ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் பொதுமக்களிடமும் கருத்து கோரப்படும். மின்சார சட்டத்திற்கமைய மின் கட்டண திருத்தம் தொடர்பான சகல நடவடிக்கைகளும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் பெப்ரவரி மாதம் மின் கட்டணம் குறைக்கப்படுமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2023 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க