இரத்தினபுரி எலபாத கெஹல்ஓவிடிகம பகுதியில் தாயொருவரும் அவரது 2 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். லயன் தொகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தே அவர்களின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 21 வயதான தாய், தனது மகனைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளமை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரரணகளில் தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பில் நீதவான் விசாரணை இடம்பெற்றுள்ள நிலையில், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாயொருவரும் அவரது 2 வயது மகனும் சடலமாக மீட்பு
படிக்க 0 நிமிடங்கள்