fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு லட்சத்து 50 ஆயிரம் பலஸ்தீனர்கள் அகதி முகாம்களில் தஞ்சம்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2023 13:22

ஒரு லட்சத்து 50 ஆயிரம்  பலஸ்தீனர்கள் அகதி முகாம்களில் தஞ்சம்..

மத்திய காசா பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேறியுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் படையினரின் யுத்த தாங்கிகள் அகதிமுகாம்களை அண்மித்துள்ளன.

புரேஜ் மற்றும் அதனை சூழவுள்ள அகதிமுகாம்களை இலக்காக வைத்து இஸ்டரேல் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்றைய தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் மாத்திரம் பெரும் எண்ணிக்கையிலான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஒக்டோபர் மாதம் 7ம் திகதியிலிருந்து இதுவரை 21 ஆயிரத்து 300 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2023 13:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க