கையடக்கத் தொலைபேசியொன்றைக் கொள்வனவு செய்யும் போது தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஊடாக அனுமதிக்கப்பட்ட தொலைபேசியையே கொள்வனவு செய்ய வேண்டும் என ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்தார்.
அதற்கிணங்க கொள்வனவு செய்யும் போது எதிர்பார்க்கப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்காக குறுஞ்செய்தியொன்றை அனுப்புவதன் ஊடாக மேற்கொள்ளலாம் என்றும் ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் குறிப்பிட்டார்.
எந்தவொரு தொலைபேசி வலையமைப்பிற்காக ஊடாக IMEI என்று டைப் செய்து இடைவெளி விட்டு 15இலக்கங்களைக் கொண்ட IMEI இலக்கத்தை 1909 என்ற தொடர்பிலக்கத்திற்கு அனுப்பி கையடக்கத் தொலைபேசி உண்மையானதா அல்லது போலியானதா என உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் பிரதிப்பணிப்பாளர் மேனகா பதிரண சுட்டிக்காட்டினார்.