எதிர்வரும் சில தினங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 26, 2023 07:33

எதிர்வரும் சில தினங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும்

எதிர்வரும் சில தினங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நத்தார் பண்டிகை காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

குறித்த நடவடிக்கை நிறுத்தப்படவில்லை எனவும், பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் காரணமாக சிலர் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றி ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா கூறுகிறார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 26, 2023 07:33