களுத்துறை வடக்கு பிரதேசத்தில் தங்க நகை விற்பனை நிலையமொன்றில் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உட்பட கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெள்ளி திருடப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 17ம் திகதி இரவு ரெயின்கோட் அணிந்து குடையுடன் விற்பனை நிலையத்திற்கு வந்த 2 பேர் பூட்டை வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து வந்து விற்பனை நிலையத்தின் முன்பக்க கதவை திறந்து முன்பக்க கண்ணாடியை தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
அதன்பின்னர், சுமார் ஐந்து நிமிடத்தில் மீண்டும் இருவரும் வந்து விற்பனை நிலையத்தினுள் புகுந்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றது சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.