இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இவ்வருடம் 4 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. எதிர்ப்பார்த்ததைவிட கூடுதலான அளவு அந்நியசெலாவணி இருப்பு கிடைத்துள்ளது. அந்நியசெலாவணி அதிகளவில் கிடைத்ததால் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது.
இம்மாதத்தில் மாத்திரம் 787 மில்லியன் அந்நியசெலாவணி கிடைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் கொடுப்பனவான 337மில்லியன் அமெரிக்க டொலர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர், உலக வங்கியின் 250 மில்லியன் அமெரிக்க டொலர் போன்றவை இம்மாதம் இலங்கைக்கு அந்நியசெலாவணியாக கிடைக்கவுள்ளது. இதன்மூலம் வரவு செலவு திட்டத்தை பலப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை பொருளாதார வளர்ச்சி வேகத்தை பலப்படுத்தவும் மூலோபாய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.