fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெள்ளத்தை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2023 19:18

வெள்ளத்தை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. திட்டத்தை துரித கதியில் அமுல்ப்படுத்துமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

திட்டத்திற்காக 30 பில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்ட மக்கள் வெள்ள அபாயத்திற்கு முகங்கொடுக்கின்றனர். இதனால் மக்களது இயல்பு நிலை பாதிக்கப்படுகிறது.

இதற்கமைய கிங் மற்றும் நில்வளா கங்கைகளால் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்த முருத்தவெலையிலிருந்து, ச்சந்திரிக்கா வாவிக்கு நீரை கொண்டுசெல்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படும். இரத்தினபுரி மாவட்டததில் மல்வள, வே கங்கை மற்றும் குக்குலே கங்கையிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டுசெல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டங்களை துரித கதியில் நடைமுறைப்படுத்துமாறு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை கித்துல்வெல நீர்த்தேக்கத்தினூடாக மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2023 19:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க