fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைத்தியர்களின் பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த ஐவர் கைது..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2023 19:15

வைத்தியர்களின் பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த ஐவர் கைது..

வைத்தியர்களின் பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் சீதுவை நகரில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போதே பாமசிகளில் வைத்தியர்களின் பரிந்துரை சீட்டின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டதும், தகுதியுடைய மருந்தாளர்களின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆயிரத்து 600 மருந்துகளுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை நாடெங்கிலுமுள்ள பெரும்பாலான பாமசிகளில் தகுதியுடைய மருந்தாளர்களின்றி மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவரின் பரிந்துரை சீட்டின்றியும் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாட்டை தடுக்க நாடு பூராகவும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2023 19:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க