fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்காசிய வலய நாடுகளில் கல்வித்தகைமைக்கான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2023 19:03

தெற்காசிய வலய நாடுகளில் கல்வித்தகைமைக்கான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து..

தெற்காசிய வலய நாடுகளில் கல்வித்தகைமைக்கான பிரகடனத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. தெற்காசியாவுக்கு பொருத்தமான பரிந்துரைகளை நாட்டிற்குள் அமுல்செய்வதே இதன் நோக்கமாகும். குறித்த பரிந்துரைகளை அனுமதிக்கும் ஆவணத்தில் கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மற்றும் தொழிலமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

வலய நாடுகளுக்கிடையில் இணக்கப்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தென் ஆசிய தகைமை பரிந்துரை உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாக மாணவர்கள் மாத்திரமின்றி தொழிலாளர்களையும் பரிமாறும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. இதேவேளை அமைச்சர்கள் கையொப்பமிட்ட ஆவணம், சர்வதேச தொழில் சங்கத்தின் வலயப்பணிப்பாளர் சிமரின் சிங்கிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2023 19:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க