3 வருடங்களின் பின்னர் 11 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா நிதி மாவட்ட பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்திற்காக வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நிதி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு விடுவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

3 வருடங்களின் பின்னர் 11 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..
படிக்க 0 நிமிடங்கள்