fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென் மாகாணத்தில் 22 அரச பாடசாலைகளில் மின் துண்டிப்பு – ஜோசப் ஸ்டாலின்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2023 06:25

தென் மாகாணத்தில் 22 அரச பாடசாலைகளில் மின் துண்டிப்பு – ஜோசப் ஸ்டாலின்

தென் மாகாணத்தில் 22 அரச பாடசாலைகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த 22 பாடசாலைகளில் மாத்தறை நகரில் மட்டும் 5 பாடசாலைகள் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் மின் கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2023 06:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க