மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி உள்ளூர் உணவுகளை தயாரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி மற்றும் செயலமர்வு இன்று கண்டியில் ஆரம்பமானது.
மத்திய மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் மத்திய மாகாண பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் கேண்டி சிட்டி சென்டரில் கண்காட்சி நடைபெற்றது.
மத்திய மாகாண சிறுவர்களிடையே உள்ளூர் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவதை பிரபலப்படுத்துவது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
மலையகத்திற்கே உரித்தான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி உணவு தயாரித்தல் மற்றும் வணிக நிறுவனங்களில் அவ்வாறான உணவுகளை பிரபலப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்