அரசில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச சேவையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் 60 வயதில் ஓய்வுபெறச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து வைத்தியர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.