ட்ரோன் கெமரோ மூலம் அக்போ யானையை வீடியோ எடுக்க முயன்ற நபர் ஒருவர் திரப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் கும்பக்வெல, மீதொடுமுல்ல, குருந்தன்குளம் மற்றும் புத்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் பயன்படுத்திய ட்ரோன் கெமரோவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பிரதான சந்தேகநபருக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், ட்ரோன் கெமரோ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான அக்போ யானை, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளின் சிகிச்சைக்குப் பின் விடுவிக்கப்பட்டது. அக்போ யானை தற்போது திரப்பனைச் பகுதியில் உலாவி வருகிறது.