கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியபாலுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த 12 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.