fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடுத்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றளித்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2023 08:58

அடுத்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றளித்துள்ளார்

அடுத்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றிதழை வழங்கியுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு 34ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக இது அமுலுக்கு வரும் என நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு வரைவை நிதி அமைச்சராக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21ஆம் திகதி வரை இடம்பெற்று, அன்று மாலை இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22ஆம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

இதன்படி நேற்று மாலை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2023 08:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க