மாத்தறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழையை அடுத்து நில்வளா கங்கையின் கிளை ஆறான கிரமஆரஓய பெருக்கெடுத்ததன் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கம்புருப்பிட்டிய, முலட்டியன, கத்துவ பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளமையால் அங்குள்ள மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு கிரமஆரஓயவின் கரையோர பகுதிகளிலுள்ள சுமார் 20 ஏக்கர் வரையான வயற்காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.