fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பதுளை, கொஸ்லாந்தை, கொட்டபக்ம பிரதேசத்தில் மற்றுமொரு மண்சரிவு பதிவு..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2023 12:15

பதுளை, கொஸ்லாந்தை, கொட்டபக்ம பிரதேசத்தில் மற்றுமொரு மண்சரிவு பதிவு..

பதுளை, கொஸ்லாந்தை, கொட்டபக்ம பிரதேசத்தில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் 50 குடும்பங்கள் வரை வாழும் நிலையில், அங்குள்ள 6 வீடுகள் வரை அபாய நிலையிலுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து 6 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த கிராமம் கடந்த காலங்களில் பாரியளவில் மண்சரிவுக்கு உள்ளான கொஸ்லாந்தை, கெலிபனாவ கிராமத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள கிராமமெனவும், குறித்த கிராமத்திற்கு மேற்பகுதியில் கொட்டபக்ம கிராமத்திற்கு பயணிப்பதற்கான வீதி காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வயல்வெளிகளை அண்மித்த பகுதிகளிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் ஹல்தமுல்ல அஸ்வெத்தும கிராமத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் சுமார் 200 ஏக்கர் வரையான பகுதி அழிவடைந்துள்ளது. 38 குடும்பங்களை சேர்ந்த 279 பேர் குறித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதோடு, 9 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெரும்பாலானோர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதோடு, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2023 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க