மோட்டார் சைக்கிளில் தம்மை அழைத்துச் செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தடியால் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் – ரஸ்நாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே நேற்று இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது, தம்மையும் அழைத்துச் செல்லும்படி குறித்த நபர் கூறியுள்ளார். அதனை பொலிஸ் உத்தியோகத்தர் மறுத்துள்ளார். இதனால் குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.