fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2023 10:10

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும்

கொவிட்- 19 வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 9 மணி முதல் பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு இடம்பெறும் என அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தல்களுக்கமைய, இந்த மக்கள் சந்திப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசாரணை பிரிவுகளுக்கு தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் அளிக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் கிடைக்காவிடின் அல்லது காலதாமதம் ஏற்படுமாயின் அது குறித்து இதன்போது முறையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2023 10:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க