fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

VAT வரியை அதிகரிப்பது நியாயமற்றது – சஜித் பிரேமதாச

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2023 06:08

VAT வரியை அதிகரிப்பது நியாயமற்றது – சஜித் பிரேமதாச

இந்நாட்டில் VAT வரியை அதிகரிப்பது நியாயமற்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(10) பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்தை,அரசாங்கத்தின் சீரற்ற பொருளாதார முகாமைத்துவத்தால் நாடு வங்குரோத்தாகி,நாட்டு மக்கள் சந்தித்து வரும் நெருக்கடி சூழ்நிலை குறித்து அவர் கருத்துரைத்தார்.

மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்திகள் 12% இலிருந்து 8% ஆகக் குறைந்த காரணத்தாலும்,சர்வதேச மூலதனச் சந்தைகளில் கடன் பெறும் வாய்ப்பை இலங்கை இழந்தது.

செயல்திறனற்ற மூலதன முகாமைத்துவத்தால்  உருவாக்கிக்கொண்ட வரிக் கொள்கை ஊடாக,இந்நாட்டில் பெரும் மூளைசாலிகள்  வெளியேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், விரிவுரையாளர்கள்,வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,கணினிப் பொறியியலாளர்கள் என பல்வேறு தரப்பினர் நாட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க, 47 தொழில் வல்லுநர்கள் அமைப்புகள் முன்வைத்துள்ள, நியாயமான வெளிப்படைத்தன்மையான கருத்துக்களை அடிப்படையாக கொண்ட வரி சூத்திர முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் “பரேட்” சட்டத்தின் ஊடாக சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஊழல் புரிவோருக்கு கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.பரேட் சட்டத்தினால் இலங்கையில் வங்கிகள் நன்மை அடைந்தாலும்,நுண்,சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையாளர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை எனவும்,வரலாற்றில் முதல் தடவையாக நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளுப்பட வரிச்சலுகை வழங்கியமையே காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டின் வங்குரோத்து நிலைக்குக் காரணமான ஊழல்வாதிகளின் செல்வங்களை இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2023 06:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க