fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2023ம் ஆண்டு வரலாற்றில் வெப்பநிலை அதிகமாக நிலவிய ஆண்டாக பதிவு..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2023 13:06

2023ம் ஆண்டு வரலாற்றில் வெப்பநிலை அதிகமாக நிலவிய ஆண்டாக பதிவு..

2023ம் ஆண்டு வரலாற்றில் வெப்பநிலை அதிகமாக நிலவிய ஆண்டாக பதிவாகியுள்ளதென விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஐரோப்பிய சங்கத்தின் கொப்பர் நிக்கலஸ் காலநிலை மாற்றம் தொடர்பான ஆயவறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு வெப்பநிலையானது கடந்த காலங்களை விட 1.4 டிக்ரி செல்சியஸ் அதிகரித்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டியுள்ள 1.5 பாகை செல்சியஸை நெருங்கும் நிலை ஏறபட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஜுன் மாத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் வெப்பநிலை அதிகரித்த மாதமாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டுபாயில் உலக காலநிலை தொடர்பான மாநாடு 150 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்று வரும் நிலையில், படிம எரிபொருள் பயன்பாட்டை எவ்வாறு படிப்படியாக கட்டுப்படுத்துவது என்பது குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விரைவாக உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அதற்கு உலக நாடுகள் கூடுதல் பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2023 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44