`நீ துவண்டு விடும் நேரத்தில் ஒரு கோப்பை தேநீராக ஆசை…’ பெரும்பாலானோர்களின் பொழுது தேநீர் இல்லாமல் தொடங்காது. அனைவருக்கும் விரும்பும் தேநீரில் பல வகைகள் உண்டு.
தேநீர் தயாரிப்பு முறைகளும் அதன் வகையைப் பொறுத்து மாறுபடும். இந்த நிலையில் வித்தியாசமான முறையில் தூளை வறுத்துத் தயாரிக்கப்படும் `ரோஸ்டட் மில்க் டீ’ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாத்திரத்தில் தூள், சீனி போட்டு வறுக்கின்றனர். சீனி உருகி, தூளுடன் ஒட்டிக்கொள்ளும் வேளையில் ஏலக்காயும் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றிக் கொதிக்க வைக்கின்றனர். அதை நன்றாகக் கிளறிவிட்டு தேவையான அளவு பால் ஊற்றிக் கொதிக்க வைக்கின்றனர். எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்த பின்னர் அதை வடிகட்டி, பருகுகின்றனர்.
தூளை வறுத்துச் செய்யப்படும் இந்த ரோஸ்டடு டீ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன.