வஸ்கடுவ பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து வஸ்கடுவ பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது விபத்துக்குள்ளானது.
இந்த சுற்றுலாப் பயணிகள் காலை 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து செக் குடியரசிற்கு செல்லவிருந்தனர்.
விபத்தில் பஸ்ஸின் பின் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், புகையிரத சாரதியும் காயமடைந்து களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.