நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை 146 இன் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.