பல கோரிக்கைகளை முன்வைத்து அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் இன்று (22) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சுமார் 11,000 ஊழியர்களைக் கொண்ட குழு இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை ஊழியர் சங்கத்தின் தலைவர் யோஹான் ஹசித முனசிங்க தெரிவித்தார்.
இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தீர்வாக நெடுஞ்சாலைக் கடமைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.