fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கெட் தடைக்கு ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2023 16:31

இலங்கை கிரிக்கெட் தடைக்கு ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை நவம்பர் 10ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு இன்று (21) நடைபெற்ற ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் தடை அமுலில் உள்ள போதிலும் இலங்கை தேசிய அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என குறித்த ஊடக அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பணத்தை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அமைய விடுவிக்க தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்பஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அகமதாபாத்தில் தற்போது நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2023 16:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க