fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2023 14:29

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது.

குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்டது. அதில் 46 மரங்கள் முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் அனுமதி கோரப்பட்டது.

இந்த நிலையில், அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து அகற்றுவதற்கான கேள்வி கோரப்பட்டது. இதனை அடுத்து இன்று குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடவடிக்கைக்கு போக்குவரத்து பொலிசார், மின்சார சபையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபையினர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த மரங்களில் அதிகமான பாலை மரங்கள் உள்ளதுடன், அவை யுத்த காலத்தில் சன்னங்களால் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

இதேவேளை, கிளிநொச்சி மகா வித்தியாலயம் முன்பாகவும், அவ்வீதியிலும் காணப்படும் ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றும் பணிகளும் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2023 14:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க