கிரிக்கட் நிறுவனத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று(20) தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய அரசியல் உரையாடலுடன் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
மேலும் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அந்த பணத்தில் ஒரு பகுதி பாதணி இல்லாதவர்களுக்கு பாதணி வாங்கவும், மட்டை, பந்து, விளையாட மைதானம் இல்லாத குழந்தைகளுக்காக செலவிடப்பட்டதாக குறிப்பிட்டார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு இதே பணமே பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கையொப்பம் பெற்று 280 மில்லியன் காசோலைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், கிரிக்கெட் வீரர்கள் சம்பாதித்த பணம் தேவையற்ற விடயங்களுக்கு செலவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.