இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 25 மீன்பிடி படகுகள் தீக்கிரை
Related Articles
இந்தியாவின் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 25 மீன்பிடி படகுகள் வரை தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்கிரையான படகுகளுக்கு நான்கு தொடக்கம் 5 கோடி ரூபாய் வரை செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. படகுகளில் காணப்பட்ட டீசல் மற்றும் எரிவாயு கொள்கலன்கள் மூலம் தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடையாளம் தெரியாதவர்களினால் படகுகளுக்கு தீவைக்கப்பட்டிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.