காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக, சிறிய ரக வேனும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வர்த்தகரான தந்தை இன்று காலை பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி கப்பலை பரிசோதிப்பதற்காக பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு சென்ற போது பேருவளையில் இருந்து வந்த மகன் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எதிரில் வந்த கார் தனது தந்தையுடையது என அடையாளம் காண்டுள்ளார்.
பின்னர், மகன் தன்னுடைய வாகனத்தால், தந்தையின் வாகனத்தை மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மகனின் வேனும் சேதமடைந்துள்ளது, ஆனால் மகனுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய கார் மற்றும் வேன் தற்போது பேருவளை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.