இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் பவுன் தங்கம் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 850 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், 22 கரட் பவுன் தங்கத்தின் விலை 1 இலட்சத்து 64 ஆயிரத்து 900 ரூபாவாக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 22 கரட் பவுன் தங்கம் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.