இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 946 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ரஷ்யாவில் இருந்து நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து 10 ஆயிரத்து 64 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 9 ஆயிரத்து 535 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 6 ஆயிரத்து 545 சுற்றுலாப்பயணிகளும் பிரித்தானியாவில் இருந்து 3 ஆயிரத்து 770 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.